2 ஆண்டிற்கு முன்பு தொலை போன கார் குறித்து சர்வீஸ் சென்டரிலிருந்து வந்த போன்… அடுத்து நடந்தது தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்…

2 January 2021, 8:48 am
Quick Share

“எதிர்பாராததை எதிர்பாருங்கள்” இந்த வசனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொருந்துகிறதோ இல்லையோ உ.பி மாநிலத்திற்கு அழகாகப் பொருந்தும். உ.பி மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஒமேந்திர சோனி இவர் கடந்த 2018ம் ஆண்டு டிச. 31ம் தேதி தனது காரை வாட்டர் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று விட்டுச் சென்ற போது கார் காணாமல் போயுள்ளது. இது குறித்து அப்பொழுது அவர் பாரா பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கார் வெகுநாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இவருக்கு அப்பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரிலிருந்து ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர் “சார் உங்கள் கார் சர்வீஸ் செய்த பிறகு எப்படி இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லையே” எனக் கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சோனி எந்த கார் எனக் கேட்கவும், அவர்கள் சோனியின் தொலைந்து போன கார் எண்ணைச் சொல்லியுள்ளனர். இதையடுத்து குறிப்பிட்ட அந்த சர்வீஸ் சென்டருக்கு நேரடியாகச் சென்று விசாரித்த போது அந்த கார் கடந்த டிச 22ம் தேதி சர்வீஸிற்கு வந்ததாகவும் அதை பித்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ் ஐ குஷ்லேந்திர பிரதாப் சிங் என்பவர் தான் எடுத்துச் சென்றுள்ளார் எனத் தெரிந்தது.

அதன் பின் சோனி பித்தூர் போலீசாரிடம் சென்று நடந்ததைச் சொன்னபோது அவர்கள் விசாரித்து, சோனியிடம் காரை ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் தரப்பில் இந்த கார கைவிடப்பட்ட நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்ததாகவும், அதை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் அது எப்பொழுது பறிமுதல் செய்யப்பட்டது. ஏன் சர்வீஸ் சென்டர் கொண்டு செல்லப்பட்டது. அதை இவ்வளவு நாட்கள் யார் பயன்படுத்தியது என்ற தகவல் இல்லை.

தொலைந்து போன கார் குறித்து சர்வீஸ் சென்டரிலிருந்து வந்த போனால் தற்போது கார் கிடைத்துள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 46

0

0