“கோரிக்கைகள் நிறைவேறும் வரை இறுதிச் சடங்கு செய்ய மாட்டோம்”..! கோவில் பூசாரியின் உறவினர்கள் போர்க்கொடி..!

Author: Sekar
10 October 2020, 12:24 pm
Rajashthan_Priest_UpdateNews360
Quick Share

வியாழக்கிழமை இரவு ராஜஸ்தானில் உள்ள கரௌலியின் புக்னா கிராமத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களால் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் கோவில் பூசாரி பாபுலாலின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மாநில அரசால் நிறைவேற்றப்படும் வரை அவரது உடலின் இறுதி சடங்குகளை செய்ய மறுத்துவிட்டனர். 

“எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் பாபுலாலின் இறுதி சடங்குகளை செய்ய மாட்டோம். எங்களுக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பட்வாரி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம்.” என்று பூசாரி பாபுலாலின் உறவினர் லலித் கூறினார்.

இதற்கிடையில், துணை ஆட்சியர் ஓம் பிரகாஷ் மீனா, பாபுலால் கிராமத்தை அடைந்து குடும்பத்தினரை இறுதி சடங்குகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

“அவரது இறுதி சடங்குகளுக்காக மக்கள் கூடினர். அவர்கள் நிர்வாகத்திடமும் மாநில அரசிடமும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளனர். இறந்தவரின் குடும்பத்தினர் இறந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டதால் இறுதி சடங்குகளை செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று மீனா கூறினார்.

ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த முயற்சியை எதிர்த்த கோவில் பூசாரியை ஐந்து பேர் எரித்துக் கொன்றனர்.

புக்னா கிராமத்தில் புதன்கிழமை ஐந்து குற்றவாளிகள் பூசாரி பாபு லால் வைஷ்ணவை விவசாய பண்ணை அருகே பிடித்து தீ வைத்தனர். ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இரவு இறந்தார்.

சடலம் வெள்ளிக்கிழமை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கைலா தேவி மகாவீர் பிரசாத் தெரிவித்தார்.

Views: - 41

0

0