அத்வானிக்கு பாரத ரத்னா விருது..? பாஜக தலைவர் கடிதத்தால் பரபரப்பு..!

9 November 2020, 9:55 am
Advani_UpdateNews360
Quick Share

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும், பாஜகவின் முதுபெரும் தலைவருமான எல்.கே.அத்வானி நேற்று டெல்லியில் தனது 92’வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரதமர் மோடியும் அதில் கலந்து கொண்டு அத்வானியிடம் ஆசி பெற்றார்.

இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி  அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மோடிக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், “உங்களுக்குத் தெரியும். அத்வானி 7 தசாப்தங்களுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜன சங்கம் மற்றும் பாஜக மூலம் அவர் செய்த சேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு தனித்துவமானது.” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

“அவரது தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் சுத்தமாகவும் நேர்மையாகவும் இருக்கிறார். மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட தலைவர் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்ட மனிதர். அத்வானி பொது வாழ்க்கையில் ஒரு அரிய பொக்கிஷம்” என்று அவர் மேலும் கூறினார்.

தனது வேண்டுகோள் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் சார்பாகவும் உள்ளது என்று கூறிய சங்கரமூர்த்தி, கடந்த ஐந்து தசாப்தங்களாக அத்வானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தனது அதிர்ஷ்டம் என்றார்.

“கன்னடத்தில் அத்வானியின் பொது உரைகளை மொழிபெயர்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடன் பல ஆண்டுகளாக மாநிலம் மற்றும் நாடு முழுவதும் பயணம் செய்தேன்” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 21

0

0

1 thought on “அத்வானிக்கு பாரத ரத்னா விருது..? பாஜக தலைவர் கடிதத்தால் பரபரப்பு..!

Comments are closed.