பல்கலை., வளாகத்தில் அத்துமீறல்: பாஜக எம்.பி. மீது புகார்…!!
26 November 2020, 7:35 pmஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறியதாக கர்நாடக பா.ஜ., இளைஞர் அணி தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக பா.ஜ., இளைஞர் அணியை சேர்ந்த தேஜஸ்விசூர்யா எம்.பி.,யாக இருந்து வருகிறார். இவர் தனது ஆதரவாளர்களுடன் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைகழகத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் பல்கலை.வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர், தேஜஸ்வி சூர்யா அத்துமீறி கூட்டம் நடத்தி உள்ளார். மேலும் தடுப்புகளை சேதப்படுத்தி உள்ளார் என போலீசில் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தெலங்கானா போலீசார் கூறுகையில் பல்கலைக்கழக வளாகத்தில் எம்.பி.,மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைதியான முறையில் கூட்டத்தை நடத்தினர் என கூறினார். வரும் டிசம்பர் மாதத்தில் ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0