கர்நாடகாவில் கோர விபத்து : அதிவேகமாக வந்த கார்… மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பைக் : அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!
Author: Babu Lakshmanan15 September 2021, 1:26 pm
கர்நாடகாவில் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரூவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் நேற்றிரவு தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் ஒரு ஆணும்,பெண்ணும் ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார், பைக்கின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதனால், நிலை தடுமாறிய இருவரும், மேம்பாலத்தில் இருந்து 40 அடி கீழே உள்ள மற்றொரு பிரதான சாலையில் விழுந்தனர். இதில், இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரில் இருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மேம்பாலத்தில் உள்ள சாலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஒரு பைக் ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்த பைக்கில் ஆண் மற்றும் பெண் என இருவர் பயணித்தனர். விபத்துக்குள்ளான பைக் தமிழ்நாடு பதிவெண்ணை கொண்டது என்பதால் உயிரிழந்த 2 பேரும் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0