கர்நாடகாவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு..!!

6 November 2020, 5:21 pm
bs_yediyurappa_updatenews360
Quick Share

கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 16ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்க மாநில அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வந்தது.

no-crackers-updatenews360

ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியிலும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில், அதனை கவனத்தில் கொண்டு நாளை முதல் வருகிற 30ந்தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க மாநில அரசு தடை விதித்தது.

இந்நிலையில், இதனை பின்பற்றி கர்நாடகத்திலும் பட்டாசுக்கு தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்புகளால், கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். இதுபற்றிய உத்தரவு விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 21

0

0