அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.. மேகதாது அணை விவகாரத்தில் முன்னேறும் கர்நாடகா..!!

Author: Babu Lakshmanan
2 August 2021, 11:30 am
basavaraj bommai karnataka cm - updatenews360
Quick Share

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கர்நாடகா முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9000 கோடி செலவில் மேகதாது என்னுமிடத்தில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளன.

இதனிடையே, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டத்தை பாஜக மற்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும், அணை கட்டும் முடிவில் மாற்றம் இல்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை பேசியதாவது :- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். கர்நாடகாவின் நிலம், நீர் ஆகிய விவகாரங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது கட்டாயம். அனைத்து கட்சிகளின் நம்பிக்கையை பெற்று, மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

மேகதாது அணைக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதனைப் பற்றி கவலைப்படாமல் கர்நாடகா அடுத்த கட்ட நடவடிக்கைக்கு துணிந்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 716

2

0