கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா… பதவி போனதற்கு காரணம் இதுதானா..?

Author: Babu
26 July 2021, 1:02 pm
yediyurappa - - updatenews360
Quick Share

கர்நாடகா முதலமைச்சர் பதவியை எடியூரப்பா இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்த எடியூரப்பாவிற்கு உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காரணம், அவரது மகன் விஜயேந்திராவை துணை முதலமைச்சராக்க முயல்வதாகவும், மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அடுத்தடுத்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதனால், கடும் நெருக்கடிக்கு மத்தியிலேயே ஆட்சி செய்து வந்தார். இருப்பினும், அவ்வப்போது அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாவதும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பதுமாக இருந்து வந்தது. ஆனால், டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர், கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆன நாளான இன்று முக்கிய தகவலை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று காலையில் அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடாக சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய எடியூரப்பா, முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன். மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பிறரது விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்,” என்று உணர்ச்சிபொங்க பேசினார்.

Views: - 296

0

0