மண்ட மேல இருக்கிற கொண்டய மறந்த காங்., தலைவர்கள் : சொந்த கட்சி தலைவரின் தில்லுமுல்லு அம்பலம்… மைக்கினால் வந்த சிக்கல்…!!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 6:04 pm
dk sivakumar - congress - updatenews360
Quick Share

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரின் லஞ்ச லாவண்யங்களை பற்றி பிரஸ் மீட்டில் சொந்தக் கட்சி தலைவர்களே பேசிக் கொண்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் டிகே சிவகுமார். சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆளாக வலம் வருபவராவார். குஜராத்தில் ஆட்சி குழப்பம் ஏற்பட்ட போது, காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடகாவிற்கு அழைத்து வந்து சகலமும் செய்து கொடுத்தார். இதன் காரணமாக, பாஜகவின் நேரடி கோபத்திற்கு ஆளாகி வருமான வரித்துறை சோதனையையும் எதிர்கொண்டார். அப்போது அவர் வீட்டிலிருந்து 8.59 கோடியை பறிமுதல் செய்தது தொடர்பாக அவர் கைதும் செய்யப்பட்டார்.

Sivakumar Karnataka Cong updatenews360

இதன்மூலம் டிகே சிவகுமார் மீதான நம்பிக்கை டெல்லி காங்கிரஸிடம் அதிகரித்தது. எனவே, எதிர்வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக டிகே சிவகுமார் களமிறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் லஞ்சம் வாங்கி குவிப்பதாக பிரஸ் மீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. உக்ரப்பா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகிய இருவரும் பெங்களூரூவில் நடந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு ஒன்றில், மைக் ஆனில் இருப்பதைக் கூட அறியாமல் கட்சி விஷயங்களை தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

முதலில் சலீம் பேசுகையில், “முன்பெல்லாம் 8% கமிஷன் வாங்கி கொண்டிருந்தார்கள். இப்போது, டிகே சிவகுமார் 12%ஆக உயர்த்தி விட்டார். முல்குந்த் (டிகே சிவகுமாரின் உதவியாளர்) மட்டும் 50 முதல் 100 கோடி வரை சம்பாதித்திருக்கிறார். அவரே அப்படி சம்பாதித்தால் சிவகுமார் எவ்வளவு சம்பாதிப்பார் என்று நினைத்து பாருங்கள்,” என்று ஹஸ்க்கி வாய்சில் பேசுகிறார்.

இதனைக் கேட்ட உக்ரப்பா, “டிகே சிவகுமாரை கட்சியின் தலைவராக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவரால் நமக்கும், கட்சிக்கும் கெடுதல்தான்,” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, மீண்டும் பேசிய சலீம், “சிவகுமார் பேச்சில் நடுக்கம் தெரிகிறது. பிபி குறைவாக இருக்கிறதா..? அல்லது குடித்து விட்டு பேசுகிறாரா..? என தெரியவில்லை. ஆனால், சித்தராமையாவின் உடல் அசைவுகள் கம்பீரமாக இருக்கிறது,” எனக் கூறி இருவரும் சிரித்துக் கொண்டனர்.

dk sivakumar - sonia - updatenews360

அவர்களின் இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் நிலை அதோ கதியாக இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் இந்த செயல், சொந்த காசில் சூனியம் வைத்தது போல் ஆகிவிட்டது.

Views: - 178

0

0

Leave a Reply