முதலமைச்சரை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சருக்கும் கொரோனா : மாநிலத்தையே உலுக்கும் நோய்தொற்று..!!!

4 August 2020, 8:55 am
Cbe Corona - Updatenews360
Quick Share

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களில் மட்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உத்தரப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் ஆகிய முக்கிய தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அவரது மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0