கர்நாடகாவில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம் : 5 குற்றவாளிகள் கைது.. இறுதிகட்டத்தில் விசாரணை..!!
Author: Babu Lakshmanan28 August 2021, 2:31 pm
கர்நாடகாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 24ம் தேதி இரவு மணியளவில் மைசூரூ சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதா திரிபுரா என்னும் பகுதியில் 23 வயதான எம்பிஏ மாணவி தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து காயப்படுத்தி விட்டு, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்கள்தான் இந்த குற்றச்செயலை செய்திருப்பதாக போலீசார் சந்தேகித்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா இன்று தெரிவித்தார்.
1
0