அரிவாளுடன் நகை கடைக்குள் புகுந்த கொள்ளையனை ஓட ஓட விரட்டிய பெண்.! வைரலான காட்சி.!!

14 August 2020, 2:03 pm
Karnataka Brave Woman - Updatenews360
Quick Share

கர்நாடகா : நகை கடைக்குள் அரிவாளருடன் புகுந்த கொள்ளையனை பெண் ஒருவர் ஓட ஓட விரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் சிக்மல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் முககவசம் அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் வந்துள்ளான். அரிவாளை காட்டி மிரட்டி நகை பறிக்க வந்த கொள்ளையனை பார்த்த கடையில் இருந்த பெண்கள் வெளியில் தலைதெறிக்க ஓடினர்.

ஆனால் அதில் ஒரு பெண் மட்டும், நாற்காலியை எடுத்து துணிச்சலோடு அந்த கெள்ளையனை அடிக்க முயன்றார். இதனால் தலைதெறிக்க கொள்ளையன் வெளியில் தப்பியோடினான். ஆனால் கடையில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையன் திருடிச் சென்று விட்டான்.

இருப்பினும் பெண்ணின் சாமார்த்தியத்தால் பெருமளவு நகைகள் தப்பியதாக நகை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Views: - 7

0

0