கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை: கர்நாடக மாநில அரசு அறிவிப்பு

Author: kavin kumar
22 August 2021, 10:13 pm
Quick Share

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி முதல் தமிழகத்திற்கான பேருந்துச் சேவையை கர்நாடக மாநில அரசு நிறுத்தி வைத்திருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது.இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்துச் சேவை மீண்டும் இயக்கப்படும் என அம்மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வெவ்வேறு இடங்களில் இருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 291

0

0