சச்சின், தனுஷ் பாணியில் திருமணம் செய்யும் கத்ரீனா: அடேங்கப்பா மெஹந்திக்கே இத்தனை லட்சம் செலவா?

Author: Aarthi Sivakumar
27 November 2021, 6:16 pm
Quick Share

ஜெய்ப்பூர்: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அடுத்த வாரம் தன்னைவிட 5 வயது சிறிய நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தன்னை விட 5 வயது சிறிய நடிகர் விக்கி கௌஷலை அடுத்த வாரம் ராஜஸ்தானில் கரம்பிடிக்கிறார். இந்நிலையில் திருமண விழாவில் கத்ரினா போட்டுக்கொள்ளும் மெஹந்திக்காக ஆகியிருக்கும் செலவு விவரம் வெளியாகி பெருத்த ஷாக் கொடுத்துள்ளது.

கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி ஜோத்பூரில் உள்ள பாலி என்னும் இடத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அதனை ஸ்பெஷலாக செய்வதற்கென்று இருக்கும் நபர்கள் தான் அதனை செய்ய இருக்கின்றனர்.
கெமிக்கல் எதுவும் கலக்கப்படாமல் முற்றிலும் இயற்கையான முறையில் உருவாகும் அந்த மெஹந்தி அவ்வளவு ஸ்பெஷலாம். முழுமையாக கையால் தயாராகும் அந்த மெஹந்தியை கத்ரீனா கைப்புக்கு அவர்கள் அனுப்பி வைக்க இருக்கின்றனர்.

அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்காக கத்ரீனாவிடம் அந்த நபர் பணம் எதுவும் வாங்கவில்லையாம். அவருக்கு இலவசமாகவே அனுப்புவதாக கூறி இருக்கிறாராம்.

ராஜஸ்தானில் நடைபெறும் திருமணத்திற்கு முன்பு மும்பையில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு பிறகு தான் அவர்கள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சென்று மிக பிரம்மாண்டமான திருமண விழாவில் பங்கேற்கின்றனர்.

Views: - 388

0

0