கேரளாவில் 15,768 பேருக்கு கொரோனா: மீண்டும் அதிகரிக்கும் பலி

Author: Udhayakumar Raman
21 September 2021, 11:21 pm
Corona Status - Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 16 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,768 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 21,367 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 214 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,897 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,513 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,61,195 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

Views: - 148

0

0