கேரளாவில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!

15 November 2020, 8:44 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 4,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 684 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 21 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,869 ஆக உள்ளது. சராசரியாக 55, 000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் சூழலில், ஞாயிற்றுக்கிழமையான இன்று 46,000 கொரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தொற்று பாதிப்பு குறைவாக பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோழிக்கோட்டில் 574 பேரும், மலப்புரத்தில் 558 பேருக்கும், ஆலப்புழாவில் 496 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Views: - 39

0

0