மோடி உதவியுடன் சர்ச்களுடன் தொடர்பை வளர்க்கும் பாஜக..! கேரள சட்டசபைத் தேர்தலுக்கு அதிரடி வியூகம்..!

31 January 2021, 9:09 pm
BJP_flag_UpdateNews360
Quick Share

கேரளாவில் உள்ள பாஜக பல்வேறு கிறிஸ்தவ சமூகங்களுடனும் தேவாலய பிரிவுகளுடனும் நெருக்கமாக பணியாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் பாஜகவுடன் சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான அனைத்து தெளிவற்ற தன்மைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து, கட்சியின் மதச்சார்பற்ற அணுகுமுறையை வெளிக்காட்ட பாஜக முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மிசோரம் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை ஜனவரி 29’ஆம் தேதி கோட்டயத்தில் உள்ள மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலய தலைமையகத்திற்கு சென்று தேவாலயத் தலைவர் பசெலியோஸ் மார்தோமா பாலோஸ் -2’ஐ சந்தித்தார்.

திருச்சூரில் பத்திரிகையாளர்களிடையே உரையாற்றிய மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கட்சி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, ஓரங்கட்டப்பட்ட பெரும்பான்மை சமூக உறுப்பினர்களும் கிறிஸ்தவ சமூகமும் கேரளாவில் அவர்களுக்கு உரிமை கிடைப்பதில்லை என்பதால்சமமாக வருத்தப்படுவதாகக் கூறினார்.

“இரு பிரிவுகளும் ஒன்றிணைந்து செயல்பட இதுவே சரியான தருணம். மத்திய அரசு திட்டங்களின் நன்மைகளை விநியோகிப்பதில் கூட கேரளாவில் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்து கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மேலும் அவர்கள் சொல்வதில் உண்மை இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்.” என்று பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கூறினார்.

யுடிஎஃப் மற்றும் எல்.டி.எஃப் இரண்டும் தீவிர இனவாத சக்திகளை சமாதானப்படுத்துகின்றன என்று பாஜக தலைவர் மேலும் கூறினார். “யுடிஎஃப் முஸ்லீம் லீக் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், எல்.டி.எஃப் எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ உடன் வெளிப்படையான கூட்டணியில் உள்ளது.

கேரளாவில் பாஜகவுக்கும் சர்ச் பிரிவுகளுக்கும் இடையிலான தொடர்பு 2000’ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கியது. எல்.கே.அத்வானி போன்ற மூத்த தலைவர்களும் பல்வேறு தேவாலயத் தலைவர்களும் பலமுறை சந்தித்தனர்.

இதற்கிடையில், மாநிலம் முழுவதும் காணப்படுகின்ற பல்வேறு லவ் ஜிஹாத் மற்றும் ஹலால் விவகாரங்களில் விசாரணை நடத்துமாறு சர்ச் கோரியுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் அனைத்திலும் பாஜக தலைவர்கள் ஒரு விவேகமான முடிவை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

கொச்சினில் உள்ள சிஏஎஸ்ஏ (கிறிஸ்டியன் அசோசியேஷன் மற்றும் அலையன்ஸ் ஃபார் சோஷியல் ஆக்சன்) லவ் ஜிஹாத் மற்றும் மாநிலத்தில் உள்ள ஹலால் பிரச்சினை குறித்து விமர்சன ரீதியாகவும் குரல் கொடுத்து வருகிறது. லவ் ஜிஹாத் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினை என்று அந்த அமைப்பு கூறுவதோடு, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.

மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாஜகவைப் பொருத்தவரை வரவிருக்கும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் மாநில பாஜக பிரிவு இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.

Views: - 0

0

0