சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப கேரளாவில் ‘சபா டிவி’ – பினராயி விஜயன் அதிரடி..!

19 August 2020, 12:57 pm
Quick Share

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மக்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளில் ஒட்டு மொத்த நாட்டில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நிஃபா வைரஸ், கொரோனா, மழை வெள்ள பாதிப்பு, நிலச்சரவு என பல்வேறு சவால்களை அம்மாநில அரசு எதிர்கொண்டு வருகிறது. இது அம்மாநில அரசின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில், தற்போது நாட்டிலேயே முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் நேரடியாக பார்கும் வகையில் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. “சபா டிவி” என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பங்கேற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது மட்டும் இன்றி சட்டப்பேரவைக்கான அதிகாரப்பூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், நம் மாநிலத்திற்கான மதிப்பை பெருமிதத்துடன் உணரும் தருணம் இது என குறிப்பிட்டார். மேலும், நாட்டிலேயே சட்டமன்றத்திற்கு என தனியாக ஒரு செனல் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை ஆகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தின் ஆட்சி நீடிக்கும் இந்த கேரள மாநிலத்தில் அரசின் ஆட்சி வெளிப்படையாக இருக்க வேண்டும், இங்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் என குறிப்பிட்டார்.

Views: - 32

0

0