டிஒய்எஃப்ஐ ஆட்கள் மட்டும் தான் பாலியல் பலாத்காரம் செய்ய முடியுமா..? கேரள காங்கிரஸ் தலைவர் சர்ச்சை..!

9 September 2020, 7:49 pm
Ramesh_Chennithala_UpdateNews360
Quick Share

கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையால் கேரள அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. “டி.ஒய்.எஃப்.ஐ செயற்பாட்டாளர்களால் மட்டுமே பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று ஏதேனும் எழுத்துப்பூர்வ விதி உள்ளதா?” என அவர் கேள்வியெழுப்பியதே இந்த சர்ச்சைக்கு காரணமாகும்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய போது, காங்கிரஸ் செயற்பாட்டாளராக இருப்பதால், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவர் மீதான கேள்விக்கு பதிலளித்த சென்னிதாலா, “டி.ஒய்.எஃப்.ஐஆர்வலர்கள் மட்டுமே ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று எங்கும் எழுதப்பட்டதா?” எனக் கூறி செய்தியாளர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

“நீங்கள் அனைவரும் அவர் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் காங்கிரசின் ஒரு அங்கம் என்று கூறி பொய்களை பரப்புகிறீர்கள். ஆனால் அவர் இடதுசாரிகளுடன் தொடர்பில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது எனது தகவல்.” என்று அவர் கூறினார்.

இந்த கருத்திற்காக சென்னிதாலாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியதுடன், சென்னிதலா தனது கருத்துக்களால் பெண்களை அவமதித்ததாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

“எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பெண்களை இழிவுபடுத்தும் அறிக்கை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் எந்தவொரு குற்றவாளிக்கும் சுகாதாரத் துறையில் இடம் கிடைக்காது” என்று ஷைலாஜா கூறினார்.

இதற்கிடையே சிறிது நேரத்திற்குப் பிறகு, சென்னிதாலா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் சொந்த நலன்களின் சூழ்ச்சிகளுக்கு விழாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

“ஒரு கேள்விக்கு, டி.ஒய்.எஃப்.ஐ செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல, என்.ஜி.ஓ தொழிற்சங்க உறுப்பினர்களும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று நான் கூற முயற்சித்தேன். எனது முழு பத்திரிகையாளர் சந்திப்பையும் ஆராய்ந்தால், சந்தேகங்கள் நீங்கும்.

சிபிஎம் சைபர் குண்டர்கள் மற்றும் சில மையங்கள் எனது பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து சில வாக்கியங்களை சிதைப்பது மற்றும் தவறான புரிதலை உருவாக்குவது ஒரு பொதுவான நடைமுறையாகும்.” என்று சென்னிதலா கூறினார்.

Views: - 0

0

0