தமிழகத்தை முந்தியது கேரளா : கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்!!

24 September 2020, 7:54 pm
Kerala Corona - updatenews360
Quick Share

கேரளா : இதுவரை இல்லாத அளவு கேரளாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனாவின் கட்டுக்குள் பல நாடுகள் சிக்கினாலும் இந்தியாவில் பாதிப்பு குறைந்தபாடில்லை. மெல்ல மெல்ல குறைந்த பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் சமீப நாட்களாக குறைந்தது வந்த கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் உச்சத்தை அடைந்தது.

ஆனால் இன்றைய கொரோனா பாதிப்பு தமிழகத்தை மிஞ்சியுள்ளதுதான் ஆச்சரியம். கேரளாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 324 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று புதிதாக 6,324 பேருக்க கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 1,54,458 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் கொரோனாவுக்கு 6,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் 5,692 பேர் பாதிப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று கேரளாவில் கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 168 பேர் குணமடைந்தனடா. இதனால் குணமடைந்ததோர் எண்ணிக்கை 1,07,846 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 45,921 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 19

0

0