வளர்ப்பு நாயை படகில் கட்டி வைத்து அடித்தே கொலை… ஈவு இரக்கமில்லாத சிறுவர்கள்..!!

2 July 2021, 10:32 am
kerala dog 1 - updatenews360
Quick Share

கேரளா : திருவனந்தபுரம் துரத்திய நாயை படகில் கட்டி வைத்து சிறுவர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருகே அடிமலைதுறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்தி வந்துள்ளார். இந்த நிலையில், கிறிஸ்துராஜாவின் வீட்டு வழியாக சிறுவன் ஒருவன் செல்லும் போது, அவனை அவரது நாய் துரத்தியுள்ளார். இதனால், அந்த சிறுவன் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளான். நாய் துரத்தியதால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாயை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளான்.

இதனால், நேரம் பார்த்து காத்திருந்த அவர்கள் நாயை கயிறு மூலம் படகில் கட்டி வைத்து, கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில், அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தடுக்க முயன்ற நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜாவுக்கு அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மறுபுறம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயங்கரனின் முயற்சியால் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

கேரளாவில் நாய் போன்ற வளர்ப்பு பிராணிகள் அடுத்தடுத்து சித்தரவதைக்குள்ளாக்கப்படுவது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 159

0

0