கேக் வெட்டி முதல் பிறந்தநாளை கொண்டாடிய கேரள யானை….

10 November 2020, 12:29 pm
elephant Bday - Updatenews360
Quick Share

கேரளா : திருவனந்தபுரத்தில் ஒரு வயது பெண் யானை கேக் வெட்டி தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகுட்டி என்ற ஒரு வயது பெண் யானை, அங்குள்ள கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தல் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீகுட்டி என்ற அந்த யானை பிறந்து ஒரு மாதம் மட்டுமே தாயுடன் இருந்துள்ளது. பின்னர் கூட்டத்தில் இருந்து வழி தவறி வந்த யானை மீண்டும் சேர முடியாமல் பரிதவித்த வந்தது. இதையடுத்து யானையை வனத்துறையினர் மீட்டு மையத்தில் சேர்த்தனர்.

தற்போது உடல் நலத்துடன் உள்ள ஸ்ரீகுட்டி, மறுவாழ்வு மையத்திற்கு வந்து ஒருவருடம் ஆன நிலையில், அந்த யானைக்கு பிறந்தநாள் கொண்டாட முடிவெடுத்தனர். இதையடுத்து மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் கரும்பு, வெல்லம் மற்றும் அன்னாசி பழங்களை வத்து கேக் தயாரித்து ஸ்ரீகுட்டியை தும்பிக்கையால் கேக் வெடியுள்ளனர்.

This 1-Year-Old Elephant Celebrating Her B'Day Is Adorable AF

இந்த கொண்டாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு ஸ்ரீகுட்டியை வாழ்த்தினர். தாயை பிரிந்த சோகத்தில் இருந்து ஸ்ரீகுட்டியை பாதுகாக்க இத்தனை பேரா என்று காண்பவர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 26

0

0