விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி ; முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு ..!

8 August 2020, 3:46 pm
Quick Share

கோழிக்கோடு: விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து கோழிக்கோடு வந்த இந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த மழைக்கால சூழ்நிலையே விபத்துக்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கோரோனா தொற்று பரவல், கனமழை, நிலச்சரிவு என பல்வேறு சவால்களை சந்தித்து வரும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சவாலாக விமான விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநில அரசு இரண்டு குழுக்களை நியமித்துள்ளது.

Views: - 18

0

0