“முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்தது”..! தங்கக் கடத்தல் வழக்கில் உண்மையை போட்டுடைத்த ஸ்வப்னா சுரேஷ்..?

11 October 2020, 6:55 pm
Swapna_Suresh_Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அமலாக்க இயக்குநரகத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஐக்கிய அரபு அமீரக தூதரகமும் 2017’ல் முதலமைச்சரின் இல்லத்தில் ஒரு மூடிய கதவு கூட்டத்தை நடத்தியதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விண்வெளி பூங்காவில் அவருடைய பணி நியமனம் முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார்.

“எனக்கு சிவசங்கரை மிகவும் நெருக்கமாகத் தெரியும். நான் தூதரக செயலாளராக இருந்த காலத்திலிருந்தே முதல்வர் பினராயி விஜயனுக்கும் அறிந்த நபராகவே இருந்தேன். நான் நம்பகமானவர் என்பதால் தான், பின்னர் பொதுப்பணித்துறையிலும் விண்வெளி பூங்கா திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டேன். விண்வெளி பூங்காவில் எனது நியமனம் முதலமைச்சருக்கு தெரிந்தே நடந்தது.” என்று ஸ்வப்னா சுரேஷ் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வப்னா சுரேஷின் அறிக்கை முதல்வர் தனது பத்திரிகையாளர் சந்திப்புகளில் விளக்கமளித்ததற்கு எதிரானது. அங்கு அவர் தகவல் தொழில்நுட்ப துறையால் பலர் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அமைச்சர்கள் யாரும் அல்லது தானோ ஸ்வப்னா சுரேஷை அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் வியாழக்கிழமை, தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஸ்வப்னா சுரேஷின் நியமனம் குறித்து முதல்வர் அறிந்திருப்பதை அமலாக்க இயக்குநரகம் வெளிப்படுத்தியது.

முன்னாள் தகவல் தொழில்நுட்ப செயலாளர் எம்.சிவசங்கர் ஸ்வப்னா சுரேஷுடன் பல்வேறு நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், ஸ்வப்னா சுரேஷ் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணத்தை மாற்றத் தொடங்கினார் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் கறுப்புப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அமலாக்க இயக்குநரகம் தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

Views: - 33

0

0