கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! அமைச்சர் ஜலீலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை..! முதல்வர் பினராயி விஜயன் பேட்டி..!

14 September 2020, 8:20 pm
pinarayi_vijayan_UpdateNews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், கேரள அமைச்சர் கே.டி. ஜலீல் எந்த தவறும் செய்யவில்லை என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது அமைச்சர் கே.டி.ஜலீலை ஆதரித்துள்ளார்.

“குரானைக் கொண்ட பார்சல் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு அனுப்பப்படுவது குறித்து அமலாக்க இயக்குநரகம் கே.டி.ஜலீலை விசாரித்தது. அவர் தவறு செய்தார் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் வக்ஃப் அமைச்சரும் ஆவார். செய்ய வேண்டியதை அவர் செய்தார்.” என்று அவர் கூறியுள்ளார்.

“சில நபர்கள் மற்றும் அமைப்புகள் மாநிலத்தில் ஒரு சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கின்றன. கொல்லத்தில், ஒரு கார் நேற்று இரவு கே.டி.ஜலீலின் வாகனத்தை வேண்டுமென்றே நிறுத்தியது.” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு யுவ மோர்ச்சா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவத்தை கண்டித்த அவர், இதுபோன்ற போராட்டங்களை ஏற்க முடியாது என்று கூறினார்.

மேலும் இந்த வழக்கின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று, லைஃப் மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி யு.வி.ஜோஸ் தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் அறிவுறுத்தியது. இது குறித்து அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

லைப் மிஷன் ஊழல் முறைகேடு தொடர்பாக, மற்றொரு கேரள அமைச்சர் ஜெயராஜின் மகனுக்கு கமிஷன் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தங்கக் கடத்தலில் ஆரம்பித்து சுற்றிச்சுற்றி கேரள அரசுக்கு சிக்கல் வர ஆரம்பித்துள்ளது.

Views: - 0 View

0

0