கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்க இயக்குநரகம்..!

11 September 2020, 5:37 pm
gold_bars_updatenews360
Quick Share

நாட்டையே உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், 2013’ஆம் ஆண்டில் நடந்த ஒரு தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ 1.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.

இணைக்கப்பட்ட அசையா சொத்துக்களில் கோழிக்கோட்டில் ஒரு குடியிருப்பு வீடு, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஒரு பகுதி ஆகியவை அடங்கும். 

முன்னாள் சுங்கத் துணை ஆணையர் சி மாதவன். பி.பி. சுனில் குமார், பயஸ், அஷ்ரப் கல்லுங்கல், சுபேர் மற்றும் அப்துல் ரஹீம் மற்றும் பலருக்கு எதிராக சிபிஐ மற்றும் ஊழல் தடுப்பு பணியகம், கொச்சினில் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியது.

அரிஃபா ஹரிஸ் மற்றும் ஆசிஃபா வீரா ஆகிய இரு பெண்களை சுங்க அதிகாரிகள் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த விசாரணை 2013 மார்ச் 19 அன்று தொடங்கப்பட்டது.

இரு பெண்களும் ஆகஸ்ட் – செப்டம்பர் 2013’இல் துபாயில் இருந்து கொச்சினுக்கு 56 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக அமலாக்க இயக்குநரகம் கூறியது.

கேரளாவின் ஒரு முக்கிய தொழிலதிபரான அஷ்ரப் கல்லுங்கல் குற்றம் சாட்டப்பட்ட சுங்க அதிகாரிகளுடனான தனது தொடர்புகளைப் பயன்படுத்தி பயஸ் மூலம் தங்கத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

சிபிஐ குற்றப்பத்திரிகையின் படி, ரூ 1786 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டதால், கருவூலத்திற்கு ரூ 1.83 கோடி இழப்பு ஏற்பட்டது.

அமலாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்ட பணப் பாதை விசாரணையில், பயஸ் மற்றும் கல்லுங்கல் ஆகியோர் தங்கக் கடத்தலின் சூத்திரதாரி என்று கூறப்படுவது தெரியவந்தது என அமலாக்க இயக்குநரகம் கூறியது.

பயஸ் துபாயில் தங்கியிருந்த பெண்களை அவர்களது குடும்பத்தினருடன் அழைத்து, பணம் தேவைப்பட்டவர்கள் மூலம் கடத்தலை நிறைவேற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கல்லுங்கல் தங்கம் வாங்குவதில் முக்கிய முதலீட்டாளர் என்றும், கேரளாவின் பல முக்கிய நபர்களுடன் நல்ல உறவைக் கொண்ட பயஸின் உதவியுடன் இந்தியாவுக்கு சரக்குகளை கடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கல்லுங்கல் மற்றும் பயஸ் ஆகியோர் துபாயில் இலாபத்தை குவித்துள்ளதாகவும் பின்னர் அதை இந்தியாவில் உள்ள தங்கள் கணக்குகளுக்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த குற்றத்தின் மூலம் சம்பாத்தித்த வருமானம் அசையாத மற்றும் அசையும் சொத்துக்களாக வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது என அமலாக்க இயக்குநரகம் கூறியது.

Views: - 8

0

0