கேரள தங்கக் கடத்தல் வழக்கு..! சிக்கிய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ காரத் ரசாக்..? சுங்கத்துறை அறிக்கையில் தகவல்..!

26 October 2020, 5:05 pm
karat_razack_mla_updatenews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சுங்கத்துறை, மத்திய அரசுக்கு சமர்ப்பித்த ஒரு அறிக்கையில், இந்த வழக்கில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ காரத் ரசாக் பெயரையும் இணைத்துள்ளது.

எனினும் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஆதரவு கொண்ட சுயேட்சை எம்.எல்.ஏ ரசாக் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

தனது அறிக்கையில், பிரதான குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, இந்த வழக்கில் காரத் ரசாக்கின் பங்கு மற்றும் தங்கக் கடத்தல் கும்பலுடனான அவரது தொடர்புகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கொடுவள்ளி நகராட்சியின் எல்.டி.எஃப் ஆதரவுடைய சுயேட்சை கவுன்சிலர் காரத் பைசல் பற்றியும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரையும் பார்த்தது கூட கிடையாது என ரசாக் மறுத்துவிட்டார்.

“நடந்துகொண்டிருக்கும் விசாரணை சரியாக நடந்தால், நான் ஒருபோதும் எந்தவொரு விசாரணை நிறுவனத்தாலும் அழைக்கப்பட மாட்டேன், ஆனால் ஒரு சதி நடக்கப் போகிறது என்றால், நான் அழைக்கப்படுவேன்.

எனது அரசியல் தொடர்புகளை நான் மாற்றியதிலிருந்து, நான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறேன். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் நான் பார்த்ததில்லை அல்லது சந்தித்ததில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்” என்று ரசாக் மேலும் கூறினார்.

முன்னதாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியில் அங்கம் வகித்த ரசாக், பின்னர் தனது ஆதரவை கம்யூனிஸ்ட் பக்கம் மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடுவள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் வேட்பாளரை 573 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தார்.

இதற்கிடையில், கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த வழக்கில் ரசாக்கின் பெயரை முதலில் அம்பலப்படுத்தியது தான் தான் என்று கூறினார்.

“நிகழ்வுகள் பற்றி அறிந்தவர்களுக்கு ரசாக் மாநில சிபிஐ-எம் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு சமம் என்பதை அறிவார. இந்த தங்க கடத்தலில் ஒரு பாதி விஜயனின் அலுவலகமும், மற்ற பாதி மாநில தலைநகரில் உள்ள சிபிஐ-எம் மாநில கட்சி தலைமையகமும் சம்பந்தப்பட்டுள்ளது” என சுரேந்திரன் மேலும் கூறினார்.

Views: - 20

0

0