கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

7 November 2020, 1:53 pm
mohammad arif khan - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. டெல்லியில் கடந்த வாரம் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Views: - 18

0

0