ஆன்லைன் ரம்மிக்குத் தடை..! தமிழகத்தை பின்பற்றி கேரளாவிலும் நடவடிக்கை..!

28 February 2021, 12:34 pm
OnlineRummy_UpdateNews360
Quick Share

ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரள அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கேரள கேமிங் சட்டம், 1960’இல் திருத்தம் செய்வதன் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 2021’இல், கேரள விளையாட்டுச் சட்டம், 1960’இன் கீழ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் பந்தய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்து முடிவு செய்யுமாறு மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுளளது.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுவது போன்ற இந்த விளையாட்டுகள்இரண்டு வார காலத்திற்குள் முழுமையாக தடை செய்யப்படும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

கேரள கேமிங் சட்டத்தின் கீழ் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் பந்தயங்களைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா சமர்ப்பித்ததாக நீதிபதி ஷாஜி.பி.சாலி மற்றும் நீதிபதி எஸ்.மணிகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சிற்கு அரசாங்கம் அறிவித்தது.

ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் பந்தய விளையாட்டு இணையதளங்களை விளம்பரப்படுத்தும் வலை இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி திரைப்பட இயக்குனர் பாலி வடக்கன் சமர்ப்பித்த பொது நல வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிமன்றம், இது குறித்தது கேரள அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சில ஆன்லைன் ரம்மி வலைத்தளங்களின் பிராண்ட் தூதர்களாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகர்கள் தமன்னா மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மனுதாரர் பிளே கேம்ஸ் 24×7 பிரைவேட் லிமிடெட் மற்றும் மொபைல் பிரீமியர் லீக்ஸ் ஆகிய இரண்டு ஆன்லைன் ரம்மி போர்ட்டல்களையும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பொய்யான வாக்குறுதிகளுடன் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக பிரபலங்களால் இந்த இணையதளங்கள் ஒப்புதல் அளிக்கின்றன என்று பொதுநல தெரிவித்துள்ளது. இந்த போர்ட்டல்களுக்கான முதன்மை இலக்குகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்கள் என்றும் அவை விரைவாக பணம் சம்பாதிக்க கவர்ந்திழுக்கப்படலாம் என்றும், இதன் மூலம் அவர்களின் சேமிப்பில் ஒரு பகுதியை இழக்க நேரிடும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் மாநிலத்தில் பதிவாகியுள்ளதாக பொதுநல வழக்கில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2021 ஜனவரி தொடக்கத்தில், 28 வயதான கேரள இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் ஆன்லைன் ரம்மி காரணமாக ரூ 21 லட்சம் இழப்பை சந்தித்த வி.எச்.வினீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கின் போது விளையாடுவதைத் தொடங்கினார். அவர் விளையாடுவதற்கு பல தனியார் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுவரை, சென்னை மற்றும் குஜராத் உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துள்ளன, மேலும் ஆந்திர, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்கள் இதற்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2020’இல், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யும் அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது தமிழகத்தைப் பின்பற்றி, கேரளாவிலும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ஆன்லைன் ரம்மிக்கு எதிராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 1

0

0