கொரோனா பாதிப்பு உயர்ந்தாலும் இறப்பு விகிதம் குறைவு: கேரள அமைச்சர் விளக்கம்…!!

Author: Aarthi
10 October 2020, 5:33 pm
kerala heath minister - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே முதன் முதலாக கேரளாவில் கொரோன தொற்று பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவல் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கேரளா, கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கையாண்டது சர்வதேச அளவில் பாராட்டை பெற்றது.

ஆனால், கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 9 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், கேரளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனா பரவல் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. எனினும் இறப்பு விகிதம் 0.36 சதவிகிதமாகவே உள்ளது. தொற்று பரவல் அதிகரித்தாலும், சுகாதாரப் பணியாளர்களின் முயற்சியால் மட்டுமே இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Views: - 45

0

0