கேரளாவில் சான்றிதழ் கேட்டு சென்ற இளம்பெண் : 18 மணி நேரம் “கதற கதற“… சுகாதார ஆய்வாளர் கைது!!
8 September 2020, 11:45 amகேரள மாநிலம் கொல்லம் அருகே கொரோனா குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் மலப்புரம் மாவட்டத்தில் ஹோம் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இருவாரங்களுக்கு முன்பு தனது ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதித்த அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர்.
குறைந்தளவு அறிகுறி என்பதால் அவரும் தனிமையில் இருந்து வந்தார், இந்தநிலையில் தனகுக் கொரோன இல்லை என்ற சான்றிதழ் பெற குளத்துப்புழா அருகே உள்ள பரதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு சுகாதார ஆய்வாளர் பிரதீப் என்பவரை அணுகினார்.
இதையடுத்து வீட்டிற்கு வாருங்கள் சான்றிதழ் தருகிறேன் பிரதீப் கூறியுள்ளார். இதையை நம்பி வீட்டிற்கு சென்ற இளம்பெண்கை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து நடந்ததை பாங்கோடு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து சுகாதார ஆய்வாளரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சுகாதார ஆய்வாளர் பிரதீப்பை சஸ்பென்ட் செய்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சுகாதார ஆய்வாளரிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று மதியம் பிரதீப் வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணை, கட்டையால் தாக்கி, கை கால்களை கட்டிலில் கட்டியுள்ளார். பின்னர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து 18 மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து வெளியே சொன்னால் தனிமை முகாமில் இருந்து வெளியேறியதாக போலீசாரிடம் புகார் செய்து வழக்குப் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனாலும் இளம்பெண் மன தைரியத்தோடு காவல்நிலையம் சென்று புகாரளித்தார்.
ஏற்கனவே கேரளாவில் கொரோனா பாதிப்பட்ட பெண்ணை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் போது, ஓட்டுநர் பெண்ணை கற்பழித்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
0
0