கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் கேரளா..! கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு..!

31 January 2021, 11:01 am
Corona_Kerala_UpdateNews360
Quick Share

நாடு முழுவதும் குறைந்து வந்தாலும், கேரளாவில் தொற்று தொடர்ந்து அதிகமாக உள்ளதால், கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க, மக்கள் கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக காவல்துறையைப் பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. 

ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சமூக இடைவெளிக்கான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மலப்புரத்தில் உள்ள போலீஸ் குழுக்கள் தெரிவித்தன.

இந்தியாவில் அதிக தினசரி கொரோனா பாதிப்புகளை கேரளா தொடர்ந்து பதிவு செய்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் 72,482 பேர் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

“பொது இடங்களில் சமூக இடைவெளியை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம் கேரளாவில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். போலீஸ் வாகனங்களைப் பயன்படுத்தி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளோம். 1-2 நாட்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்த பிறகு, நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.” என மலப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கரீம் கூறினார்.

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு கூடுதல் எச்சரிக்கையுடன் மலப்புரம் காவல்துறை சில இடங்களை ஹாட்ஸ்பாட்களாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய காவல்துறை டிஜிபி லோகநாத் பெஹெரா காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அதிக அளவில் வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்பு கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலம் என கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களால் பாராட்டுக்களை பெட்ரா கேரள அரசு தற்போது ஊரடங்கு விதிகளை கடுமையாக்குவது, கேரளாவின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

Views: - 0

0

0