‘சிறுவர்கள் உட்பட 14 பேரின் உடல்கள்’ – ராஜமலாவில் தேடும் பணி தீவிரம்..!
16 August 2020, 11:57 amராஜமலா நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி பத்தாவது நாளாக தொடர்கிறது.
கேரள மாநிலம் மூணாறு அடுத்த ராஜமலா பகுதியில் கடந்த வாரம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணின் அடியில் புதைந்தன. 70க்கும் மேற்பட்டோர் மண்ணின் அடியில் புதைந்தனர்.
மேலும், மண்ணுக்குள் புதையுண்ட நிலையிலும், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையிலும் இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரண்டு வயது சிறுமியின் உடல் ஆற்றுக் கரையில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலி உடல் மீட்கப்பட்ட எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
நேற்று எந்த உடல்களும் கிடைக்கவில்லை. இன்று பத்தாவது நாளாக மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றுவருகிறது. சிறுவர்கள் உள்பட 14 பேரைத் தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.