பேனா, பென்சிலை வைத்து தாளம் போட்ட மாணவர்கள்… VIBE ஆன கல்வித்துறை அமைச்சர் ; உடனே செய்த செயல்!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 3:27 pm
Quick Share

வகுப்பில் மேசையில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோ வைரலான நிலையில், மாணவர்களுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவாங்கூர் அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களில் 7ம் வகுப்பு மாணவர்கள் சிலர், வகுப்பறையில் பென்சில், பேனாக்களை கொண்டு, மேசையில் தட்டி தாளம் போட்டு, தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.

இதனை பார்த்த ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் திறமையை கண்டு வியந்து போகி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ படுவைரலானது.

இந்த நிலையில்‌, இந்த வீடியோவை தனது முகநூல்‌ பக்கத்தில்‌ கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்‌ குட்டி பகிர்ந்து, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Views: - 595

1

0