மூணாறு பெட்டிமுடியில் மீட்புப் பணிகள் நிறுத்தம்..!

26 August 2020, 10:42 am
Quick Share

ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மூணாறு பெட்டிமுடியில் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் மூணாறு அடுத்த ராஜமலா பெட்டிமுடி பகுதியில் கடந்த 6-ஆம் தேதி இரவு 11 மணியளவில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணின் அடியில் புதைந்தன.

இந்த கோர விபத்தில் 82 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்டோர் அடங்கிய குழு மண்ணில் புதையுண்டு கிடந்தவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையிலும் அதிகாரிகள் பணியை நிறுத்தாமல் மேற்கொண்டனர்.

இந்த சூழலில், 65 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7 வயது சிறுமி உட்பட 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் அங்கு மழை பெய்து வரும் சூழலில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மீட்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணத்தை புவியியல் துறை வெளியிட்டுள்ளது.

அதில், மலை உச்சியில் திடீரென மேக கூட்டம் திரண்டு ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான மழை கொட்டியதால்தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் ஆய்வு மேற்கொள்ள அரசு பரிந்துறை செய்துள்ளது.

Views: - 34

0

0