கேரள போலீசிடம் சிக்கிய சன்னி லியோன்..! மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை..!

6 February 2021, 1:18 pm
Sunny_Leone_UpdateNews360
Quick Share

கேரளாவுக்கு விடுமுறைக்கு வந்துள்ள பாலிவுட் நடிகை சன்னி லியோன், தன்னிடம் ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் அளித்த புகார் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்துள்ளது.

இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக உறுதியளித்த சன்னி லியோன் அதற்காக ரூ 29 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்புக்கொண்டபடி நிகழ்ச்சிகளில் பங்குபெற தவறிவிட்டார் என்று கேரளாவின் பெரும்பாவூரைச் சேர்ந்த ஆர்.ஷியாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சன்னி லியோனை நேற்று இரவு குற்றப்பிரிவுக் குழு விசாரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நிலவும் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சிகளைத் தவறவிட்டதாக அப்போது சன்னி லியோன் குற்றப்பிரிவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அமைப்பாளர்கள் நிகழ்வை ஐந்து முறை ஒத்திவைத்தாலும், அவர்களால் அதை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை என சன்னி லியோன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் புகார்தாரருக்கும் நடிகைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கேரளா குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சன்னி லியோன் முதன்முதலில் 2017’ஆம் ஆண்டு கேரளாவுக்கு சென்றிருந்தார். அப்போது சன்னி லியோனை பார்க்க ரசிகர்கள் கொச்சியின் தெருக்களில் திரண்டிருந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக இரண்டாவது முறையாக குடும்பத்துடன் கேரளா சென்றுள்ள சன்னி லியோன், எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.

Views: - 10

0

0