தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த கேரளா..! மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..!

18 January 2021, 5:19 pm
Corona_Kerala_UpdateNews360
Quick Share

தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் அடிப்படையில், இந்தியாவில் கேரள மாநிலம் மிக அதிகமாக 5,005 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவில் கணாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை விட ஒரு கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,11,342’ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,08,012’ஆக குறைந்துள்ளது. 

இதன் மூலம் குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இடையேயான வேறுபாடு 1,00,03,330’ஆக உள்ளது. இதன் மூலம் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் சதவீதம் 96.59’ஆக உள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில், 14,457 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் புதிதாக 13,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 145 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, இது தான் மிகக் குறைவான அளவு அளவு என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக குணம் அடைந்தவர்களில், 71.70 சதவீதம் பேர், 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 5

0

0