சபரிமலை கோயில்: நவம்பரில் இருந்து பக்தர்களை அனுமதிக்க முடிவு..!

30 August 2020, 4:08 pm
Quick Share

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதத்தில் திறக்கடும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

ஓணம், உத்ராடம், திருவோண பண்டிகை என கேரள மாநிலம் விழா கோலம்பூண்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் நடையும் திறக்கப்பட்டுள்ளது. வரும் செப்-2 ஆம் தேதி வரை, பக்தர்கள் தரிசனம் இன்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

கும்பம் மாத பூஜைகள் அக்-16 ஆம் தேதி நடை திறக்கும்போது, பரிட்சார்த்த முறையில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசித்து வருவதாகவும், வரும் நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தெரிவித்துள்ளது.