கேரளா டூ கான்பூர் ஐ.ஐ.டி : சாதித்து காட்டிய பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள்.. குவியும் வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2021, 1:18 pm
Kerala Kanpur IIT - Updatenews360
Quick Share

கேரளா : பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் ஐஐடி கான்பூரில் பயில தேர்வாகியுள்ள சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கேரள மாநிலம் பையனூரில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வருபவர் ராஜகோபாலன். இவர் பெட்ரோல் நிரப்பும் தொழிலை செய்து வருகிறார்.

இவரது மகள் ஆர்யா, ஐஐடியில் எம்டெக் படிக்க தேர்வானதற்கு இணையதளத்தில் பாராட்டுக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட மத்திய பெட்ரோல் தறை அமைச்ச் ஹர்தப் சிங் புரி, ஆர்யா ராஜகோபாலன் ஐஐடியில் பயில தேர்வானது அவரது தந்தைக்கு மட்டுமின்றி தேசிய ஆற்றல் துறை சார்ந்த அனைவருக்கும் பெருமை தேடி தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய ராஜகோபாலன், இந்தியன் ஆயில் நிறுவனத்திலேயே என் மகள் உயர்பதவி பெற்றால் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.

Views: - 313

0

0