கொத்து கொத்தான பாதிப்பாக இருந்தாலும் இது பரவாயில்ல : கேரளாவை விடாப்பிடியாக துரத்தும் கொரோனா…!!

Author: Babu Lakshmanan
27 September 2021, 9:06 pm
Kerala Corona - Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலமான கேரளா, கொரோனாவின் முதல் அலையை வெகுவாக கட்டுப்படுத்தி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபோது கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து தற்போது அசுர பாய்சலில் அனைத்து மாநிலங்களிலும் தனது பிடியை இறுக்கியுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன. தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,699 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். ஒரே நாளில் 17,763 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 1,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

Views: - 164

0

0