‘கேரளாவில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட கர்ப்பமாக இருந்த காட்டு எருமை’ – 6 பேர் கைது…!
20 August 2020, 9:22 amகேரளா மாநிலம் மாலப்புரம் அடுத்த சக்கிக்குழி வனச்சரகத்தில் சில மர்ம நபர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி அன்று சிலர் காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி அதை சாப்பிட்டதாக அதிகாரிகளுக்கு ரசகிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இறைச்சியை மட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து காட்டு எருமையின் இறைச்சி மற்றும் எழும்பு ஆகியவற்றை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட அந்த காட்டு எருமை கர்ப்பமாக இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி குற்றவாளி சுரேஷ் பாபு என்பவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.