மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் கொடியேரி பாலகிருஷ்ணன்..!

13 November 2020, 7:58 pm
Kodiyeri_Balakrishnan_UpdateNews360
Quick Share

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகன் பினீஷ் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் கேரளாவில் கட்சி செயலாளர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிட்பீரோ உறுப்பினராக உள்ள பாலகிருஷ்ணன் மேலதிக சிகிச்சைக்கு விடுப்பு கோரியுள்ளார் என்றும் இது மார்க்சிஸ்ட் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஒருங்கிணைப்பாளராக உள்ள விஜயராகவன் கட்சி செயலாளரின் கூடுதல் பொறுப்பை ஏற்பதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. மூன்று கட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் அடுத்த மாதம் கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரத்தால் தேர்தலில் பின்னடைவை சந்தித்து விடக்கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த கொடியேரி பாலகிருஷ்ணன் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குப் பிறகு கட்சியில் இரண்டாவது மிக வலிமையான மனிதராகக் கருதப்படுகிறார்.

பாலகிருஷ்ணன் சமீப காலமாகி புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மருத்துவ காரணங்களுக்காக அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டதாக சிபிஐ மூத்த தலைவர் எம் கோவிந்தன் மாஸ்டர் தெரிவித்தார்.

அவர் எவ்வளவு காலம் விடுப்பில் இருப்பார் என்று கேட்டபோது, அது அவரது சிகிச்சையைப் பொறுத்தது என்று மாஸ்டர் கூறினார். இடது கட்சிக்கு ஒரு சங்கடமாக, பெங்களூரு அமலாக்க இயக்குநரகம், கொடியேரியின் இளைய மகன் பினீஷை அக்டோபர் 29 அன்று கர்நாடகாவில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்திருந்தது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் இது மார்க்சிச கட்சியின் உள் விவகாரம் என்று கூறி இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ரமேஷ் சென்னிதலா மற்றும் உம்மன் சாண்டி ஆகியோர் இந்த முடிவை முன்னரே எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். “இது மிகவும் தாமதமாக இருந்தாலும், இந்த முடிவு பொருத்தமானது” என்று முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி கூறினார்.

Views: - 27

0

0