நிலக்கரி கடத்தல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஒரே நேரத்தில் ரெய்டு..! கலக்கத்தில் திரிணாமுல் கட்சியினர்..!

26 February 2021, 1:35 pm
West_bengal_CBI_ED_joint_raid_updatenews360
Quick Share

பல கோடி மதிப்பிலான நிலக்கரி கடத்தல் மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் இன்று ஒரே நேரத்தில் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் கூட்டு சோதனைகளை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான அபிஷேக் பானர்ஜியின் வீட்டில் சில தினங்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியது. இதையடுத்து தாய்லாந்து குடியுரிமை கொண்டுள்ள அபிஷேக் பானர்ஜியின் மனைவியை வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் தொழிலதிபர் ரந்தீர் குமார் பர்ன்வாலின் உத்தியோகபூர்வ மற்றும் குடியிருப்பு வளாகத்தில் நிலக்கரி மோசடி குறித்து சோதனை செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

துர்காபூர் மற்றும் அசன்சோல் போன்ற பல பகுதிகளிலும் தேடல்களைத் தொடங்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு புலனாய்வு அமைப்புகளும் ஒரே நேரத்தில் நிலக்கரி ஊழலை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதன் நிலக்கரி மோசடி வழக்கின் குற்றவியல் அம்சத்தை கவனித்துக்கொண்டிருக்கையில், இதில் உள்ள பணமோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

விரைவில் தேர்தல் நடக்கவுள்ள மேற்குவங்கத்தில், ஏற்கனவே திரிணாமுல் கட்சி கரை சேருமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில், நிலக்கரி மோசடியால் திரிணாமுல் கட்சியின் நிலை இன்னும் மோசமடைந்துள்ளது.

Views: - 9

0

0