மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா..! விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் குஷ்பூ..!

2 August 2020, 7:30 pm
Kushboo_Sundar_Updatenews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், தற்போது குஷ்பூ, அமித் ஷா விரைவில் நோய்த்தொற்றிலிருந்து விடுபட வாழ்த்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார். 

அவர் மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

“கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்தேன். அறிக்கையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன்.” என்று இந்தியில் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரசை சேர்ந்த குஷ்பூ, “எங்கள் மத்திய உள்துறை அமைச்சர் கொரோனாவிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். கொரோனாவிலிருந்து மீள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கனவே புதிய தேசிய கல்விக்கொள்கையை குஷ்பூ பாராட்டியதற்கு, அவர் பாஜகவில் இணையப் போவதாக ஊகங்கள் வெளியானது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சொன்னிங்க காந்தி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்காக ட்வீட் போடாமல் அமித் ஷாவுக்கு மட்டும் ட்வீட் போட்டுள்ளது அந்த ஊகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது என கூறப்படுகிறது.

Views: - 0

0

0