இந்தியா, இலங்கை, நேபாள நாடுகளுக்கு இடையேயான விமான சேவை மீண்டும் துவக்கம்: குவைத் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
19 August 2021, 5:54 pm
Quick Share

இந்தியாவில் இருந்து குவைத்துக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை இந்தியாவைத் தாக்கியதை அடுத்து உலகில் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்தன. குவைத் நாடும் இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து குவைத்துக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

குவைத் தடை விதித்ததால் இந்த போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது. இதேபோல் வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கான விமானப் போக்குவரத்தையும் நிறுத்தி இருந்தது. அதுவும் மீண்டும் தொடங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளின் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. ஜூலை 1ம் தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 634

1

0