மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை எல். முருகனுக்கு ஒதுக்கீடு : தகவல் ஒளிபரப்புத் துறையும் கூடுதல் பொறுப்பு

7 July 2021, 11:29 pm
Quick Share

டெல்லி: தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் பதவி விலகினர். இதேபோல் ஏற்கனவே பல்வேறு அமைச்சர் பதவிகளுக்கு காலியிடங்கள் இருந்தன. இதனால் புதிதாக 36 அமைச்சர்கள் உள்பட 43 பேர் இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றனர். 7 அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.இந்த விரிவாக்க அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இருமாநிலங்களிலும் தேர்தல் வருவதால் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தியது. இந்நிலையில் 43 அமைச்சர்களுக்கும் என்னென்ன பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Views: - 167

1

0