லக்கிம்பூர் வன்முறை : உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2021, 9:19 am
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பிரியங்கா காந்தியை பன்வீர்பூர் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், கிராம எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே, பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த தகவல் காவல்துறை தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0
0