லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்..! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு..!

23 January 2021, 4:02 pm
Lalu_Prasad_Yadav_UpdateNews360
Quick Share

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“லாலு பிரசாத் கடந்த இரண்டு நாட்களாக சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. நேற்று அவருக்கு நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது வயதைக் கருத்தில் கொண்டு, சிறந்த சிகிச்சைக்காக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.” என்று ரிம்ஸ் இயக்குநர் டாக்டர் காமேஷ்வர் பிரசாத் தெரிவித்தார்.

“அவர் இன்று எய்ம்ஸுக்கு மாற்றப்படுவார். எய்ம்ஸ் நிபுணர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேசியுள்ளோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வருவதாக டாக்டர் பிரசாத் மேலும் தெரிவித்தார்.

எட்டு பேர் கொண்ட மருத்துவக் குழு லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையை ஆராய்ந்து வருகிறது. வல்லுநர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தவுடன் அவர் எய்ம்ஸுக்கு மாற்றப்படுவார்.

மேலும் லாலு பிரசாத் யாதவை டெல்லிக்கு அனுப்ப, சிறை அதிகாரிகளும் சிபிஐ நீதிமன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்கிடையே நேற்று லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஷ்வி ஆகியோர் சிறப்புத் விமானத்தில் ராஞ்சியை அடைந்துள்ளனர்.

Views: - 0

0

0