கல்குவாரியில் நடந்த மண் சரிவு: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு…

4 September 2020, 10:43 pm
Quick Share

ஆந்திரா: சித்தூரில் உள்ள கல்குவாரியில் நடந்த மண் சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தம்பளபள்ளியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் இன்றும் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று மாலை ஏற்பட்ட மண் சரிவில் கற்கள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்ல இரண்டு கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் சடலத்தை மீட்டு போலீசார் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் தமிழகத்தை சேர்ந்த செந்தில் குமரன் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சில்லு என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 0

0

0