ராணுவம் என்கவுண்டர் : லஷ்கர் உயர்மட்டத் தளபதி உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் பலி..!

20 August 2020, 9:03 am
Indian_Army_Search_Operation_Updatenews360
Quick Share

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த இரண்டு மோதல்களில் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி என போலீசார் தெரிவித்தனர். ஷோபியனில் நடந்த ஒரு மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

அதே நேரத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆறு சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா தளபதி நசீர்-உ-லோன் உட்பட இரண்டு பேர் குப்வாராவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். .

தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் சித்ராகம் கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றி ரகசியத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படைகளின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பின்னர் இது ஒரு என்கவுண்டராக மாறியது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவரது அடையாளம் மற்றும் குழு இணைப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.

இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும், ஆறு சுற்றுகள் கொண்ட ஒரு கைத்துப்பாக்கி, யுபிஜிஎல் (துப்பாக்கிக்கு அடியில் பொருத்தப்படும் கையெறி குண்டு லாஞ்சர்) மற்றும் நான்கு சீன கையெறி குண்டுகள் ஆகியவை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

மற்றொரு மோதல் வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹண்ட்வாராவின் கணிபோரா கிரால்குண்ட் பகுதியில் வெடித்தது. இந்த நடவடிக்கையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான நசீர்-உ-தின் லோன், ஏப்ரல் 18 அன்று சோபூரில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்களைக் கொன்ற வழக்கில் ஈடுபட்டவர் மற்றும் மே 4’ஆம் தேதி ஹண்ட்வாராவிலும் பல சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காஷ்மீர் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.

Views: - 24

0

0